முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மெயின் வாசக்கால் மற்றும் கதவு: வாஸ்து சாஸ்திரப்படி

  மெயின் வாசக்கால் மற்றும் கதவு வாஸ்து சாஸ்திரப்படி மெயின் வாசக்கால் மற்றும் மெயின் கதவு அமைப்பதற்கான சில முக்கிய குறிப்புகள்: திசை:      ● வீட்டின் பிரதான கதவு வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும்.      ● தெற்கு அல்லது மேற்கு திசைகளை தவிர்க்கவும். இது எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. அளவு:       ● பிரதான கதவு மற்ற கதவுகளை விட பெரியதாகவும், உயரமாகவும் இருக்க வேண்டும்.      ● கதவின் அகலம் மற்றும் உயரம் வீட்டின் அளவு மற்றும் விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும்.      ● பிரதான கதவின் அளவுகள் ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும். வடிவமைப்பு:      ● பிரதான கதவு இரண்டு கதவுகளை கொண்டிருப்பது சிறந்தது.      ● கதவு உறுதியான மற்றும் தரமான மரத்தால் செய்யப்படிருக்க வேண்டும்.      ● கதவில் அதிகப்படியான அலங்கார வேலைப்பாடுகள் இருக்கக்கூடாது. கதவின் நிறம்:      ● வெளிர் நிறங்கள், அதாவது வெள்ளை, மஞ்சள் அல்லது பழுப்பு நி...

பப்பாளி சாகுபடியில் அதிக மகசூல் பெற: சிறந்த முறைகள் மற்றும் உத்திகள்

பப்பாளி சாகுபடி      பழ வகைப் பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆண்டு முழுவதும் சாகுபடியை மேற்கொள்ளும் வகையில், பப்பாளியைத் தேர்வு செய்வதன் மூலம் நல்ல மகசூலையும், அதிக லாபத்தையும் ஈட்டலாம்.      பப்பாளி பயிரிடும் முறை மற்றும் விற்பனை முறையை பற்றி இங்கே விவரிக்கப்பட்டுள்ளது: பருவம்:      ■ ஆண்டு முழுவதும் பப்பாளி சாகுபடி செய்யலாம், இருப்பினும் ஜூன் முதல் செபடம்பர் வரை உள்ள காலகட்டம் பப்பாளி சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. மண் மற்றும் தட்பவெப்ப நிலை:      ■ பப்பாளி பயிர் பலவகைப்பட்ட மண்ணிலும் வளரக்கூடியது. எனினும், களிமண் நிலத்தில் சாகுபடி செய்யக்கூடாது.      ■ சமவெளி பகுதிகளில், மிதமான வெப்பம் முதல் சற்றே அதிக வெப்பம் வரை உள்ள இடங்களில் பப்பாளி நன்றாக வளரும்.      ■ மலைப் பகுதிகளில், சுமார் 1,200 மீட்டர் உயரம் வரை பப்பாளி பலரும்.      ■ நல்ல வடிகால் வசதி இருப்பது அவசியம், இது தண்டு அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்த உதவும். நிலம் தயாரித்தல்:      ■ நிலத்தை 2 அல்லது 3 முறை ...

சணல் பை: எளிதில் தயாரித்து விற்பனை செய்யும் வழிமுறைகள்

      பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியிருப்பதை அடுத்து, சணல் பைகளுக்கு மதிப்பு கூடியிருக்கிறது. துணிபைகள் அளவுக்கு விலை அதிகமாக இல்லாமலும் அதே அளவுக்கு உழைக்கும் தன்மையோடும் இருப்பது சணல் பைகளின் ப்ளஸ் பாயிண்ட்!. மக்கள் அனைவரும் சணல் பையை பயன்படுத்துவதால் சந்தையில் இதன் மதிப்பு கூடியிருக்கிறது.      சணல் பைகள் தயாரிப்பு தொழிலில் இயந்திரங்கள், முதலீடு, மூலப்பொருட்கள், பையின் அளவு மற்றும் விற்பனை முறைகள் பற்றிய விரிவான தகவல்கள் பின்வருமாறு: இயந்திரங்கள் : தையல் இயந்திரம் :      ◆ சணல் துணியை தைப்பதற்கு வலுவான தொழில்துறை தையல் இயந்திரம் தேவைப்படும்.      ◆ சாதாரண தையல் இந்திரங்களை விட, தொழில்துறை தையல் இந்திரங்கள் சணல் துணியை எளிதாக கையாளும்.      ◆ தொழில்துறை தையல் இந்திரங்கள் 10000 ரூபாய் முதல் 30000 ரூபாய் வரை கிடைக்குகின்றன. ஓவரிலாக் இயந்திரம்:      ◆ சணல் துணியின் விளிம்புகளை தைத்து, அவை பிரிந்துவிடாமல் இருக்க ஓவரிலாக் இயந்திரம் பயன்படுகிறது. ...

மஞ்சள் சாகுபடி மற்றும் விற்பனை: உங்கள் விவசாயத்தை வளர்க்கும் வழிகள்

மஞ்சள் பயிர் சாகுபடி     மஞ்சள் ஓர் வெப்ப மண்டலப் பயிர் ஆகும். தண்டில் உள்ள முலையிலிருந்து கிளைத்து, மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. இது இந்தியாவின் மிக பழமையான நறுமண பொருளாகும். இதனை இந்துக்கள் சடங்குகளில் புனித பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சள் தமிழ் நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்த மருத்துவத்தின் பிரதான பகுதியாக பயன்படுத்தப்பட்டது.  ஆந்திர மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாக விளவிக்கப்படுகிறது. தமிழ் நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அதிகமாக பயிரிடப்படுகிறது.இதனால் ஈரோட்டிற்கு மஞ்சள் மாநகரம் என்ற பெயரும் உண்டு.      மஞ்சள் விளைச்சலை திறம்பட உயர்த்த சிறந்த பயிர்செய்கை முறைகள்: மஞ்சள் விவசாயத்தில் அதிக மகசூல் பெற சிறந்த பயிர் செய்கை முறை உள்ளன. அவை பின்வருமாறு: மண் மற்றும் தட்பவெப்ப நிலை:      ● மஞ்சள் நன்கு வடிகட்டிய, வளமான, வண்டல் கலந்த செம்மண் அல்லது களிமண் நிலங்களில் நன்கு வளரும்.      ● மஞ்சள் பயிரிட மிதமான வெப்பம் மற்றும் அதிக மழை தேவை. விதை நேர்த்தி:      ● நோயற்ற, தரமான விதை கிழங்க...

காளான் வளர்ப்பு முறை: குறைந்த செலவு அதிக லாபம் வெற்றிகரமான விற்பனைக்கு வழிகாட்டி

  காளான் வளர்ப்பு      தோட்டக்கலையில் பல்வேறு தொழில் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. மக்களிடையே ஆரோக்கியமான உணவு பழக்கம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் இந்தத் தொழில்களுக்கு மிகுந்த கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பாக காளான் வளர்த்தல் மற்றும் பதப்படுத்துதல் தொழிலில் நல்ல லாபத்தை ஈட்ட முடிகிறது.      வெறும் 2லட்சம் மட்டுமே முதலீடு செய்து காளான் வளர்த்தல் மற்றும் பதப்படுத்துதல் தொழிலில் அபரிமிதமான லாபத்தை ஈட்டலாம் என்று தோட்டக்கலை நிபுணர்கள் கூறுகின்றனர். அண்மைக்காலமாக காளான் வளர்ப்பு தொழில் வேகமாக பரவி வருகின்றனர். அதன் சுவை, ஊட்டச்சத்து முக்கியமாக கருதப்படுகிறது.      சைவப் பிரியர்களின் அசைவ ஆசைக்கு காளான்  நிச்சயம் தீனி போடும் அளவுக்கு அதன் சுவையும் மணமும் அமைந்துள்ளது. உடல் எடை குறைப்பு பற்றி கவலைப்படுபவர்கள் காளான்களை விரும்பி சாப்பிடுகின்றனர். காரணம் குறைந்த அளவு கலோரி மற்றும் கொழுப்பு அடங்கியுள்ளது. அத்துடன் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்து களையும் காளான் கொண்டுள்ளது. காளான்களில் உள்ள சத்துக்கள்:   ...

பேப்பர் கப் தயாரிப்பது: மூலப்பொருட்கள், இயந்திரம் மற்றும் விற்பனை பற்றிய முழுமையான வழிகாட்டி

     இன்றைய நவீன உலகில், பேப்பர் கப்புகளின் தேவை அதிகரித்து வருகிறது. டீ கடைகள், உணவகங்கள், திருமணமண்டபம் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பேப்பர் கப்புகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, பேப்பர் கப் தயாரிக்கும் தொழில், சிறிய முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழிலாக இருப்பதால், பலரும் இந்த தொழிலை நோக்கி வருக்கின்றனர். பேப்பர் கப் தயாரிக்கும் முறை :       ° மூலப்பொருட்கள் தயார்: பேப்பர் கப் தயாரிக்க, பாலி எத்திலின் பூசப்பட்ட பேப்பர் ரோல்கள் (PE கோட்டட் பேப்பர் ரோல்ஸ்) தேவை.      °கப் வடிவம் வெட்டுதல்: இந்த பேப்பர் ரோல்களை இயந்திரத்தில் வைத்து கப் வடிவத்தில் வெட்டி எடுக்க வேண்டும்.       ° சூடுபடுத்தி வடிவமைத்தல்: வெட்டப்பட்ட கப்புகளை இயந்திரத்தின் மூலம் சூடுபடுத்தி, வெளிப்புற வடிவட்டத்தை உருவாக்க வேண்டும்.      ° அடிப்பகுதி இணைப்பு: கப்பின் அடிப்பகுதியை இணைத்து, கப்பின் விளிம்புகளை உருட்ட வேண்டும். இப்பொழுது பேப்பர் கப் தயார் நிலைக்கு வந்துவிடும்.      ° தரக்கட்டுப்பாடு மற்றும் பேக்கிங்: தயாரான ப...

வாசனை மெழுகுவர்த்தி தயாரித்தல் மற்றும் விற்பனை: உங்கள் வருமானத்தை அதிகரிக்க உதவும் வழிமுறைகள்

  வாசனை மெழுகுவர்த்தி      வாசனை மெழுகுவர்த்தி தயாரிப்பு என்பது ஒரு கலை மற்றும் அறிவியல் இரண்டும் கலந்த ஒரு தொழில். இது உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த வும், சொந்த பிராண்டை உருவாக்கவும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். வாசனை மெழுகுவர்த்தி தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான திட்டங்கள் பின்வருமாறு. தேவையான பொருட்கள்:      ° மெழுகு (சோயா மெழுகு, தேன் மெழுகு அல்லது பாரபின் மெழுகு)      ° திரி (மெழுகுவர்த்தி திரி)      ° வாசனை எண்ணெய் (எசன்ஸ்)      ° வண்ணத்துக்கான மெழுகு சாயம் (விருப்பமிருந்தால்)      ° மெழுகு உருக்கும் பாத்திரம்      ° மெழுகுவர்த்தி ஊற்றும் அச்சு அல்லது கொள்கலன்      ° வெப்பமானி      ° கலக்கும் குச்சி தயாரிக்கும் முறை:      ° மெழுகை உருக்குதல்: மெழுகு உருக்கும் பாத்திரத்தில் மெழுகை போட்டு, மிதமான சூட்டில் உருக வைக்கவும். மெழுகு முழுமையாக உருகும் வரை கிளறவும்.       ° வாசனை எண்ணெய் மற்றும் வண்ணம் சேர்த்தல்: மெழுகு குற...

கப் சாம்ராணி செய்வது எப்படி: எளிய முறைகள் மற்றும் குறிப்புகள்

 கப் சாம்ராணி      கப் சாம்ராணி, வீடுகளில் மட்டுமல்லாமல், அலுவலகங்கள், கடைகள் மற்றும் கோவில்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான பூஜை பொருளாகும். இதை வீட்டில் எளிய முறையில் எப்படி தயாரிப்பது மற்றும் அதனால் கிடைக்கும் வருவாய் பற்றிய தகவல்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்  தயாரிக்கும் முறை :  தேவையான பொருட்கள்:      ° சாம்ராணி தூள்      ° குங்கிலியம்      ° வெட்டிவேர்      ° சந்தனத்துள்      ° மூலிகை பொருட்கள் (விருப்பம் இருந்தால்)      ° மரத்தூள்      ° கரித்துள்      ° கப் சாம்ராணி அச்சுகள்      ° சிறிய சாம்ராணி இயந்திரம் (விருப்பம் இருந்தால்) மூலப்பொருட்கள் கலவை :      ° சாம்ராணி தூள், குங்கிலியம், வெட்டிவேர், சந்தன தூள், மற்றும் முலிகை பொருட்கள் (விருப்பம் இருந்தால்) ஆகியவறை ஒன்றாக கலந்து தூளாக்கவும்.       ° மரத்தூள், மற்றும் கரித்துள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கல...