பாக்கு மட்டை தட்டு: தயாரிக்கும் முறை மற்றும் விற்பனை

 பாக்கு மட்டை தட்டு

     திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தயாரிக்கப்படும் பாக்கு மட்டை தட்டுகள் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகின்றன. சுற்று சூழலை காப்பதில் அந்நாடுகள் ஆர்வம் காட்டி வருவதே இதற்கு காரணம்.

     இதற்காக மக்காத பாலித்தீன், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, அதற்க்கு மாற்றாக மக்கும் தன்மையுள்ள பொருட்களை வெளிநாடுகளில் பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் தமிழ் நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலகளில் தயாரிக்கப்படும் பாக்கு மட்டை தட்டுகளுக்கு, வெளிநாடுகளில் அதிக மவுசு ஏற்பட்டுள்ளது.

     பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் முறை மற்றும் விற்பனை பற்றிய தகவல்களை இப்பதிவில் பார்ப்போம்.

இயந்திரத்தின் விலை:

     பாக்கு மட்டை தயாரிக்கும் இயந்திரங்களின் விலை அவற்றின் உற்பத்தி திறன் மற்றும் தொழில் நுட்பத்தைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக,

     ● அரை தானியங்கி (semi automatic) இயந்திரங்கள்: ₹ 1,80,000 முதல் ₹ 2,25,000 வரை இருக்கலாம். சில இடங்களில் ₹ 1,90,000 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

     ● தானியங்கி (automatic) இயந்திரங்கள்: ₹ 1,90,000 முதல் ₹ 3,00000 வரை அல்லது அதற்கு மேலும் இருக்கலாம். சில உயர்ரக இயந்திரங்கள் ₹ 2,75,000 வரை கூட விற்க்கப்படுகின்றன. மேலே குறிப்பிட்ட விலை தோராயமானவை மட்டுமே. உற்பத்தியாளர்கள், இயந்திரத்தின் தரம் மற்றும் கூடுதல் அம்சங்களைப் பொறுத்து விலையின் மாற்றம் இருக்கலாம்.

மூலப்பொருட்களின் விலை:

     பாக்கு மட்டையின் விலை அதன் தரம், கிடைக்கும் தன்மை மற்றும் அதன் காலநிலையை பொறுத்து மாறுபடும். ஒரு பாக்கு மட்டையின் விலை தோராயமாக ₹ 4 வரை இருக்கலாம் என்று ஒரு தகவல் கூறுகிறது. இருப்பினும், இது இடத்திற்கு இடம் மற்றும் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடலாம்.

     ● மூலப்பொருட்கள் சேகரிப்பு: முதலில் பாக்கு மரத்திலிருந்து உதிர்ந்த பாக்கு மட்டைகளை சேகரிக்க வேண்டும். கர்நாடக மற்றும் கேரளா இந்தியாவில் அதிக பாக்கு மட்டை உற்பத்தி செய்யும் மாநிலமாகும்.

     ● மட்டைகளை உலர்த்துதல்: சேகரிக்கப்பட்ட மட்டைகளில் உள்ள ஈரபதத்தை நீக்க வெயிலில் காய வைக்க வேண்டும். இது புஞ்சை மற்றும் காளான் வளர்ச்சியைத் தடுக்கிறது.

     ● சுத்தம் செய்தல்: காய்ந்த மட்டைகளை தண்ணீரில் 15-20 நிமிடம் உறவைத்து, மென்மையான தூரிகை கொண்டு தேய்த்து மணல் மற்றும் தூசுகளை அகற்ற வேண்டும்.

     ● இயந்திரத்தில் வைத்தல்: சுத்தம் செய்த மட்டைகளை பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் இயந்திரத்தில் வைக்க வேண்டும். இந்த இயந்திரத்தில் மேல் மற்றும் கீழ் என இரண்டு சூடான அச்சுகள் இருக்கும்.

     ● சுடுபடுத்துதல் மற்றும் வடிவமைத்தல்: இயந்திரத்தை இயக்கியதும், சூடான அச்சுகளுக்கு இடையே மட்டைகள் அழுத்தப்பட்டு தட்டு வடிவில் உருவாகும். அச்சுகளின் வெப்பநிலையை தெர்மோஸ்டாட் மூலம் கட்டுப்படுத்தலாம்.

     ● வெட்டி எடுத்தால் மற்றும் சரிபார்தல்: வடிவமைக்கப்பட்ட தட்டுகளை  இயந்திரத்திலிருந்து எடுத்து, தேவைப்பட்டால் விளிம்புகளை வெட்டி சீராக்கலாம். பின்னர், தரம் மற்றும் குறைபாடுகள் ஏதேனும் இருக்கிறதா என சரிபார்க்க வேண்டும்.

பாக்கு மட்டை தட்டுகளின் நன்மைகள்:

     ● 100% இயற்கையானது மற்றும் மட்கக்கூடியது.

     ● சுற்று சூழலுக்கு உகந்தது.

     ● குறைந்த உற்பத்தி செலவு.

     ● நல்ல வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை.

     ● உணவு பொருட்களை சூடாகவோ அல்லது குளிராகவோ வைக்க ஏற்றது.

பாக்கு மட்டை தட்டு பேக்கிங்:

     ● எண்ணிக்கை அடிப்படையிலான பேக்கிங்: பொதுவாக, தட்டுகளின் அளவு மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப 10,25,50 அல்லது 100 தட்டுகளை ஒரு பேக்கிங்கில் வைக்கலாம்.

     ● பிளாஸ்டிக் கவர் (plastic cover): தட்டுகளை தூசு மற்றும் ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்க நல்ல தரமான பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தலாம். கவர்கள் சற்று தடிமனாக இருந்தால் தட்டுகள் உடையாமல் இருக்கும்.

     ● சுருக்க கூடிய பிலிம் ( shrink film): இது தட்டுகளை இறுக்கமாக பிடிக்கவும். கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்கவும் உதவும்.

     ● அட்டை பெட்டிகள் ( Cardboard boxes): மொத்த விற்பனை மற்றும் நீண்ட தூரங்களுக்கு அனுப்பும் பொழுது அட்டை பெட்டிகளில் பேக் செய்வது பாதுகாப்பானது.

     ● லேபிலிங் (Labeling): ஒவ்வொரு பேக்கிங்கிலும் தயாரிப்பு பெயர் ("பாக்கு மட்டை தட்டு"), எண்ணிக்கை, அளவு (வட்டம், சதுரம் போன்றவை), தயாரிப்பு தேதி, தயாரிப்பாளர் பெயர்/ லோகோ மற்றும் தொடர்பு விவரங்கள் போன்ற தகவல் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். விரும்பினால், "சுற்று சூழலுக்கு உகந்தது" போன்ற வாசகங்களையும் சேர்க்கலாம்.

     ● பிராண்டிங் (Branding): உங்கள் பிராண்டிங் பெயரை மற்றும் லோகோவை பேக்கிங் கவர்களிலும், அட்டை பெட்டிகளிலும் பயன்படுத்துவது உங்கள் தயாரிப்புக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை கொடுக்கும்.

பாக்கு மட்டை தட்டு விற்பனை (sales): தயாரித்த பாக்கு மட்டை தட்டுகளை விற்பனை செய்வதற்க்கு பல்வேறு வழிகள் உள்ளன.

நேரடி விற்பனை (Direct sales):

      ● சிறுகடைகள் மற்றும் மளிகை கடைகள்: உங்கள் பகுதியில் உள்ள சிறு கடைகள்  மாளிகை கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.

     ● உணவகங்கள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்கள்: உணவகங்கள், சிறிய மற்றும் பெரிய கேட்டரிங் நிறுவனங்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யலாம்.

     ● திருவிழாக்கள் மற்றும் சந்தைகள்: உள்ளூர் திருவிழாக்கள், வாரசந்தைகள் மற்றும் கைவினை பொருட்கள் சந்தைகளில் தற்காலிக கடைகள் அமைத்து விற்பனை செய்யலாம்.

     ● வீட்டு விநியோகம்: உங்கள் சுற்று வட்டார பகுதிகளில் நேரடியாக வீட்டிற்கு சென்று விற்பனை செய்யலாம்.

     ● மொத்த விற்பனையாளர்கள் (Wholesalers): பெரிய மொத்த விற்பனையாளர்கள் மற்றும் வினியோஸ்கதார்களுடன் இணைந்து விற்பனை செய்வது பரவலான சந்தையை அடைய உதவும்.

ஆன்லைன் விற்பனை ( Online Sales): 

     ● சொந்த வலைத்தளம் (Own Website): சொந்தமாக ஒரு வலைதளத்தை உருவாக்கி உங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்யலாம்.

     ● இ-காமர்ஸ் தளங்கள் (E-Commerce Platforms): அமேசான், பிலிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் விற்பனையாளராக பதிவு செய்து உங்கள் பொருட்களை விற்கலாம்.

     ● சமூக ஊடகங்கள் (Social media): ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் உங்கள் தயாரிப்புகளை விளம்பரபடுத்தி ஆர்டர்களை பெறலாம்.

     ● வாட்ஸ்சப் வணிகம் (Whatsapp Business): வாட்ஸ்சப் வணிக கணக்கை உருவாக்கி உங்கள் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு விற்பனை செய்யலாம்.

     ● ஏற்றுமதி (Export): தரமான தட்டுகளை உற்பத்தி செய்தால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளது.

     இந்த தகவல்கள் பாக்கு மட்டை தட்டு தயாரிப்பு மற்றும் விற்பனையை மேம்படுத்த உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

கருத்துகள்