அகற்பத்தி தயாரிப்பதற்கான முழுமையான கையேடு

அகற்பத்தி

     இந்து பண்டிகைகள் அனைத்தையும் நிறைவு செய்வது அகற்பத்தி. எந்த பூஜையிலும் இது ஒரு தவிர்க்க முடியாத பகுதியாகும்.

     மத காரணங்களை தவிர, நறுமண பயனர்களிடையேயும் அகற்பத்திக்கு கணிசமான அளவு தேவை உள்ளது. அகற்பத்தி தயாரிப்பாளர்கள் இந்த தயாரிப்பை ஸ்பாக்கள், ரிசார்ட்டுகள் மற்றும் தியான மையங்கள் போன்றவற்றுக்கு விற்கலாம். அகற்பத்திக்கு அதிக தேவை இருப்பதால், அகற்பத்தி தயாரிப்பு மிகவும் இலாபகரமான தொழிலாகும். குறைந்த மூலதனம் மற்றும் உபகரணங்களுடன், நீங்கள் சிறியதாக தொடங்கலாம், சரியான சந்தைப்படுத்துதல் உத்தியுடன்,  அது குறுகிய காலத்தில் வளரக்கூடும்.

     ஊதுபத்தி என்பது அகற்பத்தி என்று அழைக்கப்படுகிறது. ஊதுபத்தி என்பது, மனம் வீசும் புகையை தந்து எரியக்கூடிய ஒரு பொருளாகும். இதன் காரணமாகவே இதனை பூஜை முதல் வீட்டின் வாசனை மற்றும் நேர்மை எண்ணம் பெறுக வீடு முதல் தொழில் செய்யும் இடம் வரை கொளுத்தி வைப்பார்கள். இது இயற்கை மற்றும் ஒரு சில செயற்கை வாசனை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் நபர்களுக்கு ஊதுபத்தி தொழில் ஒரு நல்ல தீர்வாக அமையும்.

மூலப்பொருட்கள்

     ◆ மூங்கில் குச்சிகள் (Bamboo Sticks): அகற்பத்தியின் அடிப்படையாக இவை செயல்படுகின்றன. இவை மெல்லியதாகவும், குறிப்பிட்ட நீளம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். தரமான மூங்கில் குச்சிகள் அகற்பத்தி நேராக எரியவும், நல்ல தோற்றத்திற்கும் முக்கியம்.

     ◆ தூள் கலவை (Powder Mixture/Masala): இது அகற்பத்திக்கு நறுமணத்தை அளிக்கும் மிக முக்கிய பொருளாகும். இதில் பல்வேறு வகையான மரத்தூள்கள், முலிகைகள், வாசனை திரவியங்கள் மற்றும் பிணைப்புப் பொருட்கள் கலந்திருக்கும். பிரபலமான தூள் கலவைகளில் சில:

     ● சந்தன தூள் (Sandalwood Powder)             ● ஜவ்வாது தூள் (Jugar Powder / Kiss powder- இது ஒரு பிணைப்பு பொருளாகவும் பயன்படுகிறது)                          ●  லோபன் தூள் (Loban powder)                    ● வெட்டிவேர் தூள் (Veriver Powder)              ●  பச்சிலை தூள் (Patchouli Powder                 மற்றும் பல்வேறு நறுமணமுள்ள மரத்தூள்கள் மற்றும் மூலிகைகள்.

     ◆ பிணைப்பு பசை (Binder): தூள் கலவையை மூங்கில் குச்சியில் ஒட்ட வைப்பதற்கு இது பயன்படுகிறது. பொதுவாக ஜிங்கி பசை ( Jigit / Joss Powder) அல்லது மரப்பிசின் போன்ற இயற்கையான பசைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது தூள் உதிராமல் குச்சியில் உறுதியாகப் பிடித்து கொள்ள உதவுகிறது.

     ◆ நறுமண எண்ணெய் (Fragrance Oil): கூடுதல் மற்றும் குறிப்பிட்ட நறுமணங்களை அகற்பத்திக்கு வழங்குவதற்காக இவை சேர்க்கப்படுகின்றன. சந்தனம், ரோஜா, லாவேண்டர், மல்லிகை போன்ற பல்வேறு வகையான நறுமண எண்ணெய்கள் சந்தையில் கிடைக்கின்றன. இயற்கையான எண்ணெய்கள் மற்றும் செயற்கை நறுமண எண்ணெய்கள் என இரண்டு வகைகளும் உள்ளன.

     ◆ சாயங்கள் (Colors): அகற்பத்திக்கு கவர்ச்சியான தோற்றத்தை அளிக்க சில சாயங்களில் சாயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தூள் கலவையுடன் சேர்க்கப்படுகின்றன.

     ◆ பேக்கிங் பொருட்கள் (Packing Materials): உற்பத்தி செய்யப்பட்ட அகற்பத்திகளை பேக் செய்வதற்கு கவர்கள், அட்டை பெட்டிகள் மற்றும் லேபிள்கள் தேவைப்படுகின்றன.

மூலப்பொருட்கள இயந்திரத்தில்ஏற்றுதல்:

     ◆ மூங்கில் குச்சிகள் (Bamboo Sticks): இவை இயந்திரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட தாங்கியில் (hopper) போடப்படும். இயந்திரம் தானாகவே ஒவ்வொரு குச்சியையும் எடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்.

     ◆ தூள் கலவை (Powder Mixture /Masala): இது இயந்திரத்தின் மற்றோரு தொட்டியில் (hopper) வைக்கப்படும்.

     ◆ பிணைப்பு பசை (Binder): சில இயந்திரங்களில் பிணைப்பு பசை தனியாக திரவ வடிவில் வைக்கபட்டு. மூங்கில் குச்சியின் நுனியில் தடவப்படும். சில இயந்திரங்களில் இது தூள் கலவையிலேயே கலந்திருக்கும்.

தானியங்கி செயல்முறை: இயந்திரம் இயக்கப்பட்டவுடன் பின்வரும் செயல்கள் தானாகவே நடைபெறும்.

     ◆ குச்சி எடுத்தல் மற்றும் நகர்த்துதல்: இயந்திரம் ஒரு நேரத்தில் ஒரு மூங்கில் குச்சியை எடுத்து, கன்வேயர் பெல்ட் அல்லது வேறு வழி முறை மூலம் அடுத்த நிலைக்கு நகர்த்தும்.

     ◆பிணைப்பு பசை தடவுதல்: சில இயந்திரஙகளில், மூங்கில் குச்சியின் ஒரு முனை பிணைப்பு பசை தொட்டியில் நனைக்கப்படும் அல்லது தெளிக்கப்படும்.

     ◆ தூள் ஒட்டுத்தல் (Rolling/Coating): பிணைப்பு பசை தடவப்பட்ட முனை தூள் கலவை இருக்கும் பகுதிக்குள் செல்லும். இயந்திரம் குச்சியை சுழற்றுவதன் மூலமோ அல்லது தூள் கலவையை குச்சியின் மீது தூவுவதன் மூலமோ தூள் சீராக ஒட்டப்படும். சில இயந்திரங்களில் இந்த செயல் முறை ஒன்று அல்லது இரண்டு முறை மீண்டும் நிகழலாம், நல்ல தடிமனான பூச்சுக்காக.

     ◆ வெளியேற்றம்: அகற்பத்தி தயாரானதும், இயந்திரம் அவற்றை வெளியேற்றும்.

     ◆ உலர்த்துதல்: இயந்திரத்திலிருந்து வெளியே வரும் அகற்பத்திகள் ஈரப்பதமாக இருக்கும். இவற்றை நிழலான அல்லது சூரிய ஒளி படும் இடத்தில் உலர வைக்க வேண்டும். பெரிய அளவில் உற்பத்தி செய்பவர்கள் இதர்கென உலர்த்தும் இயந்திரங்களை பயன்படுத்துகிறார்கள்.

     ◆ நறுமண எண்ணெய் சேர்த்தல் (விரும்பினால்): காய்ந்த அகற்பத்திகளில் நறுமண எண்ணெயை தெளித்தோ அல்லது தொய்த்தோ கூடுதல் நறுமணத்தை சேர்க்கலாம். இது பொதுவாக இயந்திரம் மூலம் செயல்படுவதில்லை, இது ஒரு தனி செயல் முறையாகும்.

     ◆ பேக்கிங்: நறுமணம் சேர்க்கப்பட்ட (அல்லது சேர்க்கப்படாத) காய்ந்த அகற்பத்திகள் பின்னர் கவர்கள் அல்லது பெட்டிகளில் பேக் செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராகின்றன. இதுவும் பொதுவாக இயந்திரத்தால் செய்யப்படுவதில்லை, மனிதர்களால் செய்யப்படுகிறது.

இயந்திரத்தின் வகைகள்

     அகற்பத்தி தயாரிக்கும் இயந்திரங்களில் பல்வேறு வகைகள் உள்ளன, அவை அவற்றின் தானியங்கி திறன் மற்றும் உற்பத்தி திறனைப் பொறுத்து வேறுபடுகின்றன.

     ◆ கை முறை இயந்திரங்கள் (Manual Machines): இவை குறைந்த உற்பத்தி திறன் கொண்டவை. ஒருவர் கையால் குச்சிகளை வைத்து இயக்க வேண்டும்.

     ◆ அரை தானியங்கி இயந்திரங்கள் (Semi-automatic Machines): இவை சில வேலைகளை தானாகச் செய்யும், ஆனால் குச்சிகளை வைப்பது போன்ற சில வேலைகளை மனிதர்கள் செய்ய வேண்டும்.

     ◆ முழு தானியங்கி இயந்திரங்கள் (Fully Automatic Machines): இவை அனைத்து வேலைகளையும் தானாகவே செய்யும் திறன் கொண்டவை, அதிக உற்பத்தி திறனை வழங்கும்.

அகற்பத்தி பேக்கிங்

     பேக்கிங் என்பது உங்கள் அகற்பத்தியின் தரம் மற்றும் கவர்ச்சியைப் பாதுகாப்பதுடன், வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் உதவுகிறது.

     ◆ பாதுகாப்பு: அகற்பதிகள் உடையாமல், ஈரப்பதம் மற்றும் தூசு படாமல் பாதுகாக்கக்கூடிய பேக்கிங் பொருட்களைத் தேர்ந்தெடுக்கவும்.

     ◆ கவர்ச்சியான முறையில் பேக்கிங்: பேக்கிங் கவர்ச்சிகரமானதாகவும், உங்கள் பிராண்டின் அடையாளத்தை வெளிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். நல்ல வடிவமைப்பு மற்றும் வண்ணங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும்.

     ◆ தகவல்கள்: பேக்கிங்கில் உங்கள் பிராண்ட் பெயர், அகற்பத்தியின் நறுமணம், எண்ணிக்கை, உற்பத்தி தேதி, பயன்படுத்தும் முறை மற்றும் ஏதேனும் சிறப்புத் தகவல்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

     ◆ வகைகள்: உங்கள் இலக்கு சந்தை மற்றும் தயாரிப்பின் விலையை பொறுத்து பல்வேறு வகையான பேக்கிங் முறைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

     ◆ பிளாஸ்டிக் கவர்கள் (plastic Covers): குறைந்த விலை மற்றும் அடிப்படை பாதுகாப்பு வழங்கும்.

     ◆ அட்டை பெட்டிகள் (Cordoned Boxes): அதிக பாதுகாப்பு மற்றும் நல்ல தோற்றத்தை கொடுக்கும். பல்வேறு அளவுகள் மற்றும் வடிவமைப்புகளில் கிடைக்கும்.

     ◆ பாலிவுட் பைகள் (Pouches): நறுமணத்தை பாதுகாக்க உதவும். 

     ◆ காகித உறைகள் (Paper Envelopes): எளிய மற்றும் சுற்றுச்சூழளுக்கு உகந்த விருப்பம்.

     ◆ சிறப்பு பரிசு பெட்டிகள் (Gift Boxes): பண்டிகை காலங்கள் அல்லது சிறப்பு விற்பனைகளுக்காக.

     ◆ லேபிளிங் (Labeling): உங்கள் பிராண்ட் பெயர், லோகோ, நறுமனத்தின் பெயர், எண்ணிக்கை மற்றும் MRP (Maximum Retail Price) போன்ற தகவல்கள் லேபிளில் தெளிவாக இருக்க வேண்டும்.

அகற்பத்தி விற்பனை

     நேரடி விற்பனை:

     ◆ உள்ளுர் கடைகள் (Local Shops): மளிகை கடைகள், பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், சிறிய பல்பொருள் அங்காடிகள் போன்றவற்றில் உங்கள் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம். அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கமிஷன் வழங்க வேண்டியிருக்கும்.

     ◆ சந்தைகள் மற்றும் திருவிழாக்கள் (Markets and Festivels): வாராந்திர சந்தைகள், உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் கண்காட்சிகளில் தற்காலிக கடைகள் அமைத்து விற்பனை செய்யலாம்.

     ◆ வீடு வீடாக விற்பனை (Door to Door): சிறிய அளவில் தொடங்க இதுவும் ஒரு வழியாக இருக்கலாம்.

     ◆ சொந்த சில்லறை கடை (Own Retail Outlet): அதிக முதலீடு தேவைப்படும். ஆனால் உங்கள் பிராண்டை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்ல முடியும்.ம

மறைமுக விற்பனை (Indirect Sales):

     ◆ மொத்த விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள்(Wholesalers and Distributors): இவர்கள் மூலம் பெரிய சந்தையை அடையமுடியும். நீங்கள் மொத்த விலையில் விற்பனை செய்ய வேண்டும்.

     ◆ பல்பொருள் அங்காடிகள் (Supermarkets and Hypermarkets): பெரிய அளவிலான விற்பனைக்கு இது ஒரு நல்ல வழி. ஆனால் கடுமையான தரக்கட்டுப்பாடுகள் மற்றும் கமிஷன் இருக்கும்.

  ஆன்லைன் விற்பனை (Online Sales):

     ◆ இ-காமர்ஸ் வலைதளங்கள் (E-commerce Websites): Amazon, Flipkart, Snapdeal போன்ற தளங்களில் உங்கள் பொருட்களை விற்கலாம்.

     ◆ சமூக ஊடகங்கள் (Social Media): Facebook, Instagram போன்ற தளங்களில் உங்கள் தயாரிப்புகளை விளம்பரபடுத்தி விற்பனை செய்யலாம்.

     ◆ சொந்த வலைதளங்கள் (Own Website): உங்கள் சொந்த ஆன்லைன் ஸ்டோரை உருவாக்கி விற்பனை செய்யலாம்.

     ◆ ஏற்றுமதி (Export): வெளிநாடுகளில் அகற்பத்திக்கு நல்ல தேவை உள்ளது. ஏற்றுமதி வாய்ப்புகளை ஆராயலாம். இதற்கான விதிமுறைகள் மற்றும் சந்தை தேவைகளை அறிந்து செயல்பட வேண்டும்.

விற்பனையை அதிகரிக்க சில உத்திகள்

     ◆ உங்கள் அகற்பத்தியின் தரம் முக்கியம். நல்ல நறுமணம் மற்றும் நீண்ட நேரம் எரியும் தன்மை வாடிக்கையாளர்களை தக்க வைக்கும்.

     ◆ சந்தை விலை மற்றும் உங்கள் உற்பத்தி செலவுக்கு ஏற்றவாறு சரியான விலையை நிர்ணயிக்கவும்.

     ◆ அவ்வப்போது தள்ளுபடிகள் மற்றும் சிறப்பு சலுகைகளை வழங்குவதன் மூலம் விற்பனையை அதிகரிக்கலாம்.

     ◆ வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப புதிய நறுமணங்களை அறிமுகப்படுத்துவது ஆர்வத்தை தக்க வைக்கும்.

     ◆ நல்ல வாடிக்கையாளர் சேவையை வழங்குவது மீண்டும் விற்பனையை உறுதி செய்யும். வாடிக்கையாளர்கள் கருத்துக்களை மதித்து செயல்பட வேண்டும்.

     ◆ அகற்பத்தி பேக்கிங் மற்றும் விற்பனை ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. கவர்ச்சியான பேக்கிங் நல்ல விற்பனைக்கு வழி வகுக்கும் சரியான விற்பனை உத்திகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் அகற்பத்தி தொழிலை வெற்றிகரமாக வளர்க்க முடியும்.

கருத்துகள்